X

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் – 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 92.37, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 96.44 தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.

அறிவியல் பாடத்தில் 96.33 சதவீத மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 98.48 சதவீத மாணவர்களும், வேதியியலில் 99.14 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.