பிறருக்கு வழிகாட்டும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் பல்வேறு உள்ளுறுப்புகளுக்கான உறுப்புமாற்று சிகிச்சை செயல்திட்டம்
சென்னை, 2023, செப்டம்பர் 27 – எம்ஜிஎம் ஹெல்த்கேரின் பல்வேறு உள்ளுறுப்புகளுக்கான உறுப்புமாற்று சிகிச்சை செயல்திட்டம், இந்தியாவிலும் மற்றும் தெற்காசியாவிலும் புதிய பல்வேறு உள்ளுறுப்புகள் மற்றும் அடிவயிற்று உறுப்புகளுக்கான உறுப்புமாற்று சிகிச்சை (MVT) மையத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் அனில் வைத்யா தலைமையிலான எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் மருத்துவர்களின் குழு, உறுப்புமாற்று செயல்திட்டத்தின் வழியாக மருத்துவ அறிவியலின் எல்லைக்கோடுகளை தொடர்ந்து மறுவரையறை செய்து வருகிறது. சிக்கலான மருத்துவ சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை வழங்குவதில் எம்ஜிஎம்-ன் அர்ப்பணிப்பையும் மற்றும் நோயாளிகளின் உயிர்களை காப்பதில் தளராத பொறுப்புறுதியையும் எடுத்துக்காட்டுகிற 5 முக்கியமான ஆய்வுகளை (Case Studies) சமூகத்தின் பார்வைக்கு வைப்பதில் எம்ஜிஎம் பெருமிதம் கொள்கிறது.
பல்வேறு உள்ளுறுப்புகளுக்கான உறுப்புமாற்று சிகிச்சை (MVT) என்பது, உலகளவில் உறுப்புமாற்று செயல்திட்டங்களில் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் புதிய பிரிவாகும். குறிப்பிட்ட சில நாட்பட்ட வாழ்க்கைமுறை நோய்களை குணமாக்குகிற மற்றும் நோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துகிற திறனுடன் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் உறுப்புமாற்று சிகிச்சைகளை எம்ஜிஎம் ஹெல்த்கேர், சென்னை வழங்கி வருகிறது. இந்த மருத்துவ செயல்முறைகளின் மூலம் உயிர்களை காப்பாற்ற இயலுமென்பதால் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இப்புதிய செயல்திட்டம் நம்பிக்கையை தந்திருக்கிறது. கல்லீரல், சிறுநீரகங்கள், சிறுகுடல், கணையம், வயிறு போன்ற இரை, குடற்பகுதியில் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது செயல்திறன் இழந்து வருகிற உறுப்புகளுக்கு பதிலாக, உயிரிழந்த தானம் அளிப்பவரிடமிருந்து பெறப்படும் ஆரோக்கியமான உறுப்புகளை மாற்றிப் பொருத்தும் செயல்முறை இதில் இடம்பெறுகிறது. நாட்பட்ட நோய்கள் உள்ள நபரிடமும் மற்றும் பல்வேறு உறுப்புகளின் செயலிழப்பு இரையகக் குடலிய பாதையில் புற்றுநோய்களினால் அவதியுறுகிற நபர்களிடமும் இந்த உறுப்புமாற்று சிகிச்சைகள் மிகவும் பலனளிப்பதாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
வாய் வழியாக உட்கொள்ளப்படும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை முறையாக உறிஞ்சவிடாமல் குடலை தடுக்கும் ஒரு பாதிப்பு நிலையான குறுகிய குடல் நோய்க்குறி (short gut syndrome) உள்ள நோயாளிகளுக்கு விரிவான குடல் சார்ந்த மறுவாழ்வு சேவையினையும் பல்வேறு உள்ளுறுப்புகளுக்கான உறுப்புமாற்று சிகிச்சை செயல்திட்டம் வழங்குகிறது. இந்த தனித்துவமான திட்டம், முழுமையான, ஊசிவழியாக செலுத்தப்படும் ஊட்டச்சத்து (TPN) என அழைக்கப்படுகிறது; முறையாக செயல்படாத செரிமான அமைப்புகள் உள்ள யாளிகளுக்கு சிறை ஊடாக முழுமையான ஊட்டச்சத்தும் வழங்கப்படும் ஒரு வழிமுறை இது. குறுகிய குடல் நோய்க்குறி பாதிப்புள்ள நோயாளிகளின் உடல்நிலை மோசமாவதிலிருந்து தடுத்து சீராக்குவதற்கு TPN-ஐ பயன்படுத்துவதில் எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் MVT குழு சிறப்பு நிபுணத்துவம் கொண்டிருக்கிறது.
பேராசிரியர், டாக்டர். அனில் வைத்யா தலைமையின்கீழ் இயங்கும் இந்த MVT குழு, உயிருள்ள தானமளிப்பவகளிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சையை குழந்தைகளுக்கு வெற்றிகரமாக செய்திருக்கிறது. இறுதிநிலை சிறுநீரக நோய்ப்பாதிப்புள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு கணையம் மற்றும் சிறுநீரகத்தை ஒன்றாக ஒரே நேரத்தில் மாற்றும் சிகிச்சைகளையும் புற்றுநோயாளிகளில் சிறுகுடல் மாற்று சிகிச்சையையும், உயிருள்ள தானமளிப்பவரிடமிருந்து பெறப்படும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சைகளையும் மற்றும் பல்வேறு உறுப்புகள் செயலிழந்திருக்கிற நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த பல உறுப்புகளை மாற்றும் சிகிச்சையையும் இக்குழு வெற்றிகரமாக செய்திருக்கிறது.
ஆய்வு 1 : வியப்பூட்டும் வகையில் குணமடைந்த தைரியமான 9 வயது சிறுவன் 9 வயதான ஹரீஷ் சோலங்கி என்ற சிறுவன் கீழே விழுந்ததனால் தொடை எலும்பு உடைந்து உயிருக்கு ஆபத்தான சிக்கலை எதிர்கொள்ள நேர்ந்தது. எலும்பியல் அறுவைசிகிச்சை செய்யப்பட்டபோதிலும்கூட அதன்பிறகு அவனது நிலைமை மோசமாக தொடங்கியது. குறுகிய குடல் நோய்க்குறி இருப்பது கண்டறியப்பட்டதால் சிறுகுடல் உறுப்புமாற்று சிகிச்சை ஹரீஷ்க்கு அவசியமாகத் தேவைப்பட்டது. எம்ஜிஎம் ஹெல்த்கேர்-க்கு விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட ஹரீஷ்-க்கு மாரடைப்பும் ஏற்பட்டதால் அவனது உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியானது. எனினும் டாக்டர். அனில் வைத்யா தலைமையிலான மருத்துவர்களின் மேம்பட்ட திறன்களால் ஹரீஷ் பாதிப்பிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தான்; சிறுகுடல் உறுப்புமாற்று சிகிச்சை வெற்றிகரமாக அவனுக்கு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இப்போது முழுமையான உடல்நலம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் அவன் இப்போது தைரியத்தோடு முன்னேறிக் கொண்டிருக்கிறான்.
ஆய்வு 2 : கேரளாவைச் சேர்ந்த குடும்பத்தலைவிக்கு வாழ்க்கையைத் தொடர இரண்டாவது வாய்ப்பு குறுகிய குடல் நோய்க்குறியின் கடுமையான பாதிப்பு அறிகுறிகளுடன் கேரளாவைச் சேர்ந்த 46 வயதான குடும்பத்தலைவி எம்ஜிஎம் ஹெல்த்கேர் -க்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தார். டாக்டர். அனில் வைத்யா அவர்களின் மருத்துவ கவனிப்பின்கீழ் அவர் உயிபிழைப்பதற்கு இன்றியமையாததாக இருந்த ஒரு சிக்கலான சிறுகுடல் உறுப்புமாற்று சிகிச்சை செயல்முறை இப்பெண்மணிக்கு செய்யப்பட்டது. பெங்களுருவிலிருந்து விமானத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட ஆரோக்கியமான சிறுகுடலை இவருக்குப் பொருத்தும் சிறப்பான விளைவுகளை தந்திருக்கிறது. தனது இயல்பான வாழ்க்கையை உற்சாகத்தோடு தொடங்குவதற்கு தயாராகிவரும் இப்பெண்மணி இப்போது முழுமையாக குணமடைந்து வருகிறார;.
ஆய்வு 3 : கணையம் – சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சையின் மூலம் மாறும் நீரிழிவு பராமரிப்பு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் 34 வயதாகும் திரு. பரம் க்ரோவர், வகை 1 நீரிழிவு, டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவு குறைவது பற்றிய அறியாத நிலை ஆகிய சிக்கல்களை எதிர்த்து போராடி உயிர்வாழ்கிற நிலையில் இருந்தார். பேராசிரியர் டாக்டர். அனில் வைத்யா உட்பட மருத்துவ நிபுணர்களின் குழு இவருக்கு ஒரே நேரத்தில் கணையம் – சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைகளை மேற்கொண்டது, இவரது வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை கொண்டுவரும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. டயலாசிஸ் சிகிச்சையிலிருந்து இவருக்கு விடுதலை அளித்த இந்த செயல்முறை, நீரிழிவு நிலையிலிருந்தும் இவரை குணமாக்கியிருக்கிறது; மேலும் இதனோடு தொடர்புடைய பிற சிக்கல்களின் இடர்வாய்ப்பை பெரிதும் குறைத்திருக்கிறது.
ஆய்வு 4 : விடாமுயற்சி மற்றும் நிபுணத்துவத்தின் மூலம் உயிருக்கான ஆபத்தை வென்ற சாதனை சிறுகுடல் உறுப்புமாற்று சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து திரு. நந்த் கிஷோர் என்ற நோயாளி பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டார். கடுமையான சவால்கள் இருந்தபோதிலும், இணைந்த எம்ஜிஎம்-ன் மருத்துவர்கள் குழு விடாமுயற்சியோடும், நிபுணத்துவத்தோடும் வழங்கிய முழுமையான சிகிச்சைப் பராமரிப்பு கடும் சிக்கல்களிலிருந்து மீண்டு குணமடைவதை உறுதி செய்திருக்கிறது. பாதிப்புகளிலிருந்து விடுபட்ட நல்ல உடல்நிலையோடு இவர் மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
ஆய்வு 5 : நீரீழிவு மற்றும் சிறுநீரக நோயை ஒரே நேரத்தில் மருத்துவ செயல்முறையில் பொருத்தும் உறுப்புமாற்று சிகிச்சை செய்து சாதனை வகை 1 நீரீழிவு மற்றும் நாட்பட்ட தீவிர சிறுநீரக நோயால் அவதியுற்ற 29 வயதான திரு. வஷிஷ்த் கந்தாரி என்ற நோயாளிக்கு உயிருள்ள தானமளிப்பவரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகம் மற்றும் இறந்த நபரிடமிருந்து பெறப்பட்ட கணையம் ஆகியவற்றை ஒரே மருத்துவ செயல்முறையில் பொருத்தும் உறுப்புமாற்று சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு அடிவயிறு சார்ந்த சிக்கலை இவர் எதிர்கொண்டபோதிலும்கூட, இவருக்கு குணமளிக்கும் விரிவான சிகிச்சையை எம்ஜிஎம் ஹெல்த்கேர், வயிறுசார்ந்த உடல் உறுப்புமாற்று சிகிச்சை மையம் தொடர்ந்து வழங்கி வருகிறது. நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையின் மூலம் குணமடைய செய்வதில் இம்மருத்துவர்கள் கொண்டிருக்கும் தளராத பொறுப்பு நல்ல எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.
உடல்நல பராமரிப்பில் எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் தொலைநோக்கு குறிக்கோளுடன் கூடிய எம்ஜி;எம் ஹெல்த்கேர்-ன் அணுகுமுறையின் பின்புல ஆதரவாகத் திகழும் பேராசிரியர் டாக்டர். அனில் வைத்யா, இந்த மருத்துவ சாதனைகள் குறித்து அவரது எண்ணங்களை பகிரும்போது கூறியதாவது, ‘‘பல்வேறு உடல் உள்ளுறுப்புகளுக்கான உறுப்புமாற்று சிகிச்சை செயல்திட்டம் சுகாதார பராமரிப்பை மறுவரையறை செய்வதில் நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு ஒரு நல்ல சான்றாகும். எமது மருத்துவக் குழுவினரின் பிரம்மாதமான திறன்களை இந்த நேர்வு ஆய்வுகள் நேர்த்தியாக வெளிப்படுத்துகின்றன. உயிர்களை காப்பதில் எமது திறன்மிக்க செயல்பாட்டை கோடிட்டுக் காட்டும் இந்நிகழ்வுகள், சிக்கலான மருத்துவ சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை வழங்கும் எமது மையத்தின் அணுகுமுறையையும் சிகிச்சை நிபுணத்துவத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. மருத்துவ அறிவியலின் எல்லைக்கோடுகளை தொடர்ந்து விரிவுப்படுத்தி மேன்மையான சிகிச்சையை அனைவருக்கும் சாத்தியமாக்குவதில் எங்களது குறிக்கோளிலும், செயல்பாட்டிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.’’
எம்ஜிஎம் ஹெல்த்கேர் மல்டி-விசெரல் குழு, பேராசிரியர்.டாக்டர்.அனில் வைத்யா தலைமையில் டாக்டர் செந்தில்குமார், டாக்டர்.ஆனந்த் பரத், டாக்டர்.தியராகன் சீனிவாசன், டாக்டர். கார்த்திக் மதிவாணன் மற்றும் டாக்டர் நிவாஷ் ஆகியோர் இந்த அறுவை சிகிச்சைகளை செய்து தொழில்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ல் இயங்கிவரும் வயிறு சார்ந்த உறுப்புகளுக்கான உறுப்புமாற்று சிகிச்சை மையம், பேராசிரியர் டாக்டர். அனில் வைத்யா தலைமையின்கீழ் மருத்துவ சிகிச்சையில் புதுமை செயல்பாடுகளை நிகழ்த்துவதில் தொடர்ந்து பிறருக்கு வழிகாட்டி வருகிறது. ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளின் உயிர்களை காப்பதிலும் மற்றும் சிக்கலான மருத்துவ சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை வழங்குவதிலும் எம்ஜிஎம் மருத்துவமனை மேற்கொண்டு வரும் சிறப்பான செயல்பாட்டுக்கு, உத்வேகம் அளிக்கும் ஒரு சாட்சியமாக, மேற்குறிப்பிடப்பட்ட 5 சிகிச்சைகள் திகழ்கின்றன என்பதில் ஐயமில்லை.