பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் – அறையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து தாய்லாந்தின் பூசனனை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் பூசனனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த தொடரில் இந்திய தரப்பில் பி.வி.சிந்து மட்டுமே களத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.