X

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் – பி.வி.சிந்து வெற்றி

பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் பிரிவில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் மிட்செல் லீயை (கனடா) வீழ்த்தினார்.

ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சுபாங்கர் தேவ் 15-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் தாமி சுகிர்டோவுக்கு (இந்தோனேஷியா) அதிர்ச்சி அளித்தார்.

Tags: sports news