கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 20 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ரோஜர் பெடரர். 39 வயதான உலகின் 8-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் கடந்தத சில வருடங்களாக காயம் காரணகமாக தொடர்ச்சியாக விளையாட முடியாத நிலையில் இருந்து வருகிறார்.
மூட்டில் ஏற்பட்ட காயத்திற்காக இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகியுள்ளார்.
விலகுவது குறித்து ரோஜர் பெடரர் கூறுகையில் ‘‘இரண்டு முறை மூட்டு அறுவை சிகிச்சை செய்த பிறகு, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காயத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், என்னுடைய உடல்நலம் குறித்து கவனிப்பது முக்கியமானது. காயம் குணமடைவதற்காக எனக்கு நானே அவசரப்படுத்திக் கொள்ள மாட்டேன் என்பதை உறுதி செய்வதும் முக்கியமானது’’ என்றார்.