பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்! – மீண்டும் சாதிப்பாரா நடால்?
உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ரபெல் நடால். உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அவர் களிமண் தரையில் விளையாடுவதில் வல்லவர்.
இதன் காரணமாக 32 வயதான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 11 முறை வென்று சாதனை படைத்துள்ளார்.
அவர் 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆகி இருந்தார்.
வேறு எந்த வீரரும் ஒரு கிராண்ட் சிலாமில் இதுவரை அதிகமான பட்டம் வென்றது கிடையாது.
வருகிற 26-ந்தேதி தொடங்க இருக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிசிலும் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் முதல்நிலை வீரர் ஜோகோச்சை (செர்பியா) வீழ்த்தினார். இதன் மூலம் அவரது நம்பிக்கை அதிகரித்துள்ளது.
களிமண் தரையில் (கிளே) விளையாடுவதிலும் மன்னரான அவர் தனது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்ள கடுமையாக போராடுவார். நடால் ஒட்டு மொத்தமாக 17 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று 2-வது இடத்தில் உள்ளார். அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 முறையும், விம்பிள்டனை 2 தடவையும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 1 முறையும் வென்றுள்ளார்.
சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 20 கிராண்ட் சிலாம் பட்டத்துடன் (ஆஸ்திரேலிய ஓபன் 6+, பிரெஞ்சு ஓபன் 1+, விம்பிள்டன் 8+ அமெரிக்க ஓபன் 5) முதல் இடத்தில் உள்ளார். ஜோகோவிச் 15 கிராண்ட் சிலாமை பட்டத்துடன் (ஆஸ்திரேலிய ஓபன் 7+, பிரெஞ்சு ஓபன் 1+, விம்பிள்டன் 4+, அமெரிக்க ஓபன் 3) மூன்றாவது இடத்தில் உள்ளார்.
நடாலின் பிரெஞ்சு ஓபன் ஆதிக்கத்தை இந்த முறை தகர்க்க வேண்டும் என்ற வேகத்தில் ஜோகோவிச், பெடரர் உள்ளனர்.
இதேபோல் டொமினிக் தீயம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர் மனி), டிஸ்டிபயாஸ் (கிரீஸ்), நிஷிகோரி (ஜப்பான்), டெல்போட்ரோ (அர்ஜென் டினா) போன்ற வீரர்களும் நடாலுக்கு சவாலாக விளங்கலாம்.