X

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச்சை வீழ்த்தி தியெம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், 4-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியெம்-ஐ எதிர்கொண்டார்.

இந்த போட்டி நேற்று நடைபெற்றது. முதல் செட்டை தியெம் 6-2 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டை ஜோகோவிச் 6-3 எனக் கைப்பற்றினார். 3-வது செட்டை 7-5 என தியெம் கைப்பற்றினார். 4-வது செட்டை ஜோகோவிச் 7-5 எனக் கைப்பற்றினார். நான்கு செட்கள் முடிவில் இருவரும் 2-2 என சமநிலையில் இருந்தனர்.

வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் தியெம் அபாரமாக விளையாடினார். 3-1 என முன்னிலையில் இருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஜோகோவிச் சிறப்பாக விளையாடி நெருக்கடி கொடுத்தார். என்றாலும் இறுதியில் தியெம் 7-5 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தார்.

முதல் நிலை வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி தியெம்மிற்கு நான்கு மணி, 13 நிமிடங்கள் தேவைப்பட்டது. நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் தியெம் நடாலை எதிர்கொள்கிறார்.

Tags: sports news