பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – செரீனாவை வீழ்த்தி காலியிறுதிக்கு முன்னேறிய ரிபாகினா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் 39 வயதான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், 21 வயதான கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவும் மோதினர்.
முதல் செட்டை ரிபாகினா 6-3 என எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் ரிபாகினாவிடம் செரீனா போராடினார். ஆனால் இரண்டாவது செட்டையும் ரிபாகினா 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், ரிபாகினா 6-3, 7-5 என்ற நேர் செட்களில் செரீனாவை எளிதில் வீழ்த்தி காலிறுக்கு முன்னேறினார்.