X

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – போபண்ணா ஜோடி 2 வது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- பிரேசிலின் மார்செலோ-ஓர்லாண்டோ ஜோடியுடன் மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.