Tamilவிளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – போபண்ணா ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்வி மிட்டெல்கூப் (நெதர்லாந்து) ஜோடி 4-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் லாய்டு கிளாஸ்பூல் – பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா இணையை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது.