X

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச், மெத்வதேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்து முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் ஹெர்பர்ட்டுடன் மோதினார். இதில் 6-4, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் டொமினிக் கோபருடன் மோதினார். இதில் மெத்வதேவ் முதல் இரு செட்டை 6-3, 6-4 என எளிதில் கைப்பற்றினார். 3வது செட்டை டொமினிக் 7-5 என வென்றார். இதனால் சுதாரித்துக்கொண்ட மெத்வதேவ் 4வது செட்டை 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.