Tamilவிளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – காலியிறுதியில் அல்காரஸ் – சிட்சிபாஸ் மோதல்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) 4-வது சுற்று ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த 17-ம் நிலை வீரரான லாரன்சோ முசட்டியை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-3 , 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

இன்னொரு ஆட்டத்தில் 5-ம் நிலையில் உள்ள ஸ்டேபானோ சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 6-0, என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் ஆப்னரை (ஆஸ்திரியா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் அல்காரஸ்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலினா சுவிட்டோலினா 4-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த 9-ம் நிலை வீராங்கனை டாரியா கசட்கினாவை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் 28-வது வரிசையில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), கரோலினா மச்கோவா (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.