Tamilவிளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – கரோலின் கார்சியா 2வது சுற்றில் தோல்வி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். அனா பிளின்கோவா (ரஷியா) 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கார்சியாவை வீழ்த்தினார்.

ஷபலென்கா (பெலாரஸ்), எமர்டன்ஸ் (பெல்ஜியம்) உள்ளிட்ட வீராங்கனைகள் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 7-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), முதல் நிலை வீரரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.