பிரிஸ்பேன் டென்னிஸ் – நடால் விலகல், முர்ரே தோல்வி

பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் பரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரபேல் நடால் நேரடியாக 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்று 2-வது சுற்றில் ஜோ-வில்பிரைட் டிசோங்காவை எதிர்கொள்ள இருந்தார். கடைசி நேரத்தில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடும்போது நடாலுக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின் தற்போதுதான் களம் இறங்க தயாரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் முர்ரேயும் காயத்திற்குப்பின் பிரிஸ்பேன் தொடரில் களம் இறங்கினார். முதல் சுற்றில் வெற்றி பெற்ற முர்ரே 2-வது சுற்றில் 4-வது இடத்தில் இருக்கும் டேனில் மெட்வேதேவ்-ஐ எதிர்கொண்டார். இதில் முர்ரே 5-7, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news