இந்தி முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு’ தி ஸ்கை ஐஸ் பிங்க்” எனும் வாழ்கை வரலாறு குறித்த இந்தி படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நோய் எதிர்ப்பு குறைபாடு கோளாறுடன் பிறந்த ஆயிஷா சவுத்ரி எனும் இளம் ஊக்கமளிக்கும் பேச்சாளர் பற்றிய கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் தனது கணவர் நிக் ஜோனஸ் இப்படத்தின் படப்பிடிப்பின் போது அழுது விட்டார் என்று கூறியுள்ளார்.
‘திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் படப்பிடிப்பு செட்டில் இருந்த படியே செய்து கொண்டிருந்தோம். எங்களுக்கு இயக்குனர் சோனாலி போஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் இருவரும் எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தனர். படப்பிடிப்பின் போது தீவிரமாக ஒரு காட்சியில் நடிக்கும் போது மொத்த செட்டுமே மிகவும் அமைதியாக இருக்கும்.
அப்போது நிக் ஜோன்ஸ் படப்பிடிப்பு செட்டில் இருப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் அவர் செட்டில் இருந்த போது, ஒரு முக்கியமான காட்சி படமாக்கப்பட்டு வந்தது. படத்தில் பல துயரங்களுடன் போராடும் ஒரு தாய் கதாபாத்திரத்தில் நடித்தேன். அவரின் புதிதாக பிறந்த குழந்தை நோய் எதிர்ப்பு குறைபாடுதான் பல துன்பங்களை அனுபவித்துவரும். குழந்தையை காப்பாற்ற நிதி பற்றாக்குறை துயரங்களுடன் போராடி வரும் தாய் கதாபாத்திரம். பயங்கரமாக அழுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
முழு செட்டுமே மிகவும் அமைதியாக இருந்த தருணம் ஒரு விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. அது என் கணவர் நிக் ஜோனஸின் அழுகை சத்தம். அதை பார்த்ததும் சோனாலி, பிரியங்கா நீங்கள் உங்களுடைய கணவரை அழவைத்து விட்டீர்கள் என்று சிரித்தார்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.