பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்

 

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 27 வது நாளாக தொடரும் நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நிலைமை குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன், பிரதமர் மோடி
தொலைபேசி மூலம் பேசினார்.

இந்த உரையாடலின் போது, ரஷியா-உக்ரைன் இடையேயான நெருக்கடியைத் தணிக்க, போரை நிறுத்துவது, பேச்சுவார்த்தைக்கு திரும்புதல் மற்றும் தூதரக ரீதியான தீர்வு பாதைக்கு செல்வது
குறித்த இந்தியாவின் நிலைபாட்டை மோடி மீண்டும் வலியுறுத்தினார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டம் மற்றும் அனைத்து நாடுகளிடையேயான பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதில் இந்தியாவின் நம்பிக்கை குறித்து பிரதமர் அப்போது
எடுத்துரைத்தார்.

மேலும் இருதரப்பு நலன்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும், வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடுகள், பாதுகாப்பு உள்பட இந்தியா-பிரிட்டன் இடையே பல்வேறு துறைகளில்
ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

விரைவில் இந்தியா வருமாறு போரிஸ் ஜான்சனுக்கு, இந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி அழைத்து விடுத்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools