முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த சேலையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா, தாயார் ரேவதி ஆகியோர் 26-ந்தேதி அன்று குளிர்சாதன பெட்டியில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் காலமானார்கள் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த செய்தியாளர் பிரசன்னாவின் குடும்பத்திற்கு சிறப்பு நிகழ்வாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
–