Tamilசெய்திகள்

பிரான்ஸ் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 3 பேர் பலி

பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மத்திய பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த தளங்களில் வேகமாக பரவியது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் உள்ள மேலும் 2 கட்டிடங்களிலும் தீப்பிடித்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், 51 தீயணைப்பு வாகனங்களில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் 3 பேர் தீயில் உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *