பிரான்சில் தேசிய தினம் கொண்டாட்டம் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு நாட்டு வீரர்களின் அணிவகுப்பு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற இருக்கிறது. இந்த அணிவகுப்பில் இந்திய வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இதற்காக இந்திய வீரர்கள் பாரீஸ் சென்றுள்ளனர். முப்படையின் மூத்த அதிகாரிகள் பாரிஸ் சென்றுள்ளனர்.
அவர்கள் ஒத்திகையில் ஈடுபடுவார்கள். இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அதை ஏற்றுக்கொண்டு இரண்டு நாள் பயணமாக பாரிஸ் செல்ல இருக்கிறார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.