பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட்டம் – பிரதமர் மோடி பங்கேற்பு

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர் இரண்டு நாள் சுற்றுப்பயணமான பிரான்ஸ் சென்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில் வறவேற்றார். மேலும், பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரான்ஸ் நாட்டில் இன்று தேசிய தினம் பாஸ்டில் டே கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் நாட்டின் முதல் பெண்மணி பிரிஜிட் மேக்ரான் மற்றும் பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்ற முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். தேசிய தின விழாவில் பிரம்மாண்ட அணி வகுப்பு தொடங்கியது. இதில், பிளைபாஸ்ட் மூலம் பிரான்ஸ் தேசியக் கொடியின் வண்ணங்களில் வானத்தில் பறக்கவிட்டனர்.

இந்த அணிவகுப்பு விழாவில், இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. பிரான்ஸ் படை வீரர்களுடன் சேர்ந்து இந்திய படை வீரர்களும் அணிவகுப்பு நடத்துகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news