Tamilசெய்திகள்

பிராந்தியத்தின் பாதுகாப்புக்காக நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு

இந்தியா, வங்கதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய வங்கக்கடல் நாடுகள் இணைந்து, பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்காக பிம்ஸ்டெக்’என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.

இந்நிலையில், பிம்ஸ்டெக் அமைப்பின் 5-வது மாநாடு இலங்கையில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த சில வாரங்களாக, ரஷ்யா – உக்ரைன் இடையே நடக்கும் போர் சர்வதேச சட்டங்கள், விதிகளின் ஸ்திரத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த சூழ்நிலையில் நம்முடைய பிராந்தியத்தின் பாதுகாப்புக்காக நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நம்மிடையே இணைப்பு, வளம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய வங்காள விரிகுடாவை பாலமாக அமைக்க வேண்டிய தருணம் இது. நம் பிராந்திய பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.