Tamilசெய்திகள்

பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் இந்திய போர் கப்பலில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

இந்தியா-ரஷிய கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரை தளங்களில் இருந்து ஏவக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டெல்லியில் ஐ.என்.எஸ். ஏவுகணை அழிப்பு கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட மாடுலர் லாஞ்சரைப் பயன்படுத்தி ஏவப்பட்ட சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சீறி பாய்ந்து சென்று இலக்கை அழித்தது.

இதன் மூலம், பிரம்மோஸின் நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன், முன்னணி தளங்களில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட நெட்வொர்க் செயல்பாடுகள் மீண்டும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேபோல் இந்திய விமானப்படை, கிழக்கு கடற்பரப்பில் சுகோய் போர் விமானத்தில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.

இந்திய கடற்படையின் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் இந்த பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.