பிரமாண்டமாக உருவாகும் ‘பிரேமலு 2’

இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிரேமலு. மமிதா பைஜூ, நஸ்லேன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்து இருந்தார்.

காதல் கலந்த காமெடி கதையம்சம் கொண்டிருந்த பிரேமலு திரைப்படம் மலையாளத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. பிரேமலு படம் வசூலில் ரூ. 100 கோடியை கடந்தது.

இந்த நிலையில், பெரும் வரவேற்பை பெற்ற பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. கிரிஷ்ஏ.டி. இயக்கும் இந்த படத்தை பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் தயாரிக்கின்றனர். கிரிஷ் ஏ.டி. மற்றும் கிரன் ஜோசி இணைந்து எழுதி இருக்கும் பிரேமலு 2 திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools