Tamilசினிமா

பிரபாஸ் படத்தில் இணைந்த நடிகை மாளவிகா மோகனன்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், பாகுபலி திரைப்படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். பாகுபலியை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் பான் இந்தியா அளவில் வெளியிடப்படுகிறது.

அந்த வகையில், சாஹோ, ராதே ஷ்யாம், ஆகிய பான் இந்தியா திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. ‘சலார்’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிரபாஸ் ஒப்பந்தமாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் ‘தி ராஜா சாப்’. இப்படத்தின் அறிவிப்பு முதல் தோற்றத்துடன் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

மாருதி இயக்கும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். பீப்பிள் மீடியாபேக்டரியின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் பிரபாஸூடன், மாளவிகா மோகனன், நிதி அர்வால், ரித்தி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் பரவிய நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.