Tamilசினிமா

பிரபாஸை வைத்து பிரம்மாண்டமான படம் இயக்க ரெடியாகும் ‘கே.ஜி.எப்’ இயக்குநர்

பாகுபலி’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராகிவிட்டவர் பிரபாஸ். இதனால் அவர் நடித்து வரும் படங்களை பான்-இந்தியா படமாகவே உருவாக்கி வருகின்றனர். நடிகர் பிரபாஸ் நடிப்பில் தற்போது ‘சலார்’ திரைப்படம் உருவாகி வருகிறது. கன்னடத்தில் ‘கேஜிஎப்’ என்ற பிளாக்பஸ்டர் ஆக்‌ஷன் படத்தை கொடுத்த பிரசாந்த் நீல், இப்படத்தை இயக்குகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சலார் படத்துக்கு பின் பிரபாஸ் – பிரசாந்த் நீல் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் கதைக்களம் வரலாற்றுப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாம். அதனால் இப்படத்தை பாகுபலி பாணியில் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்க உள்ளாராம். மேலும் பிரபாஸின் 25-வது படமாக இது உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.