X

பிரபாஸின் ‘சாஹோ’ ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ்!

‘பாகுபலி-2’ க்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சாஹோ’. சுஜித் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் உருவாகும் இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.150 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்க, அருண் விஜய், லால், மந்த்ரா பேடி, எவ்லின் ஷர்மா, மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே, ஜேக்கி ஷெராப், வெண்ணிலா கிஷோர், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஷங்கர் எசான் லாய், எஸ்.எஸ்.தமன் இணைந்து இசையமைக்க, ஆர்.மதி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் தயாரித்து வருகிறது.

பிரபாஸ் அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்ட நிலையில், தற்போது ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வரலாற்று படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படம் 2020-ல் ரிலீசாக இருக்கிறது.