பிரபல சின்னத்திரை நடிகர் டோலிசோஹி காலமானார்
இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்த பிரபல நடிகையான டோலிசோஹி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் டோலி சோஹி சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். ‘கலாஷ்’, ‘ஹிட்லர் திதி’, ‘டெவோன் கே தேவ் மகாதேவ்’, ‘ஜனக்’ போன்ற பல டிவி நிகழ்ச்சிகளில் இவர் நடித்துள்ளார்.
அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது. டோலி சோஹியின் சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் நேற்று மரணமடைந்தார். அடுத்த நாளே டோலிசோஹி மரணம் அடைந்திருப்பது இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.