அரசின் தலைவராக நரேந்திர மோடியின் 20 ஆண்டுகாலம் குறித்த ஆய்வு’ என்ற தேசிய அளவிலான கருத்தரங்கின் நிறைவுவிழாவில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
ஒரு உண்மையான தலைவர் என்பவர் அவரது நோக்கம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில்தான் அடையாளம் காணப்படுவார். இந்த இரண்டு விஷயங்களிலும் பிரதமர் மோடி 24 கேரட் தங்கம்.
20 ஆண்டுகளாக அரசுக்கு தலைமை வகித்தபோதும், ஊழலின் ஒரு சிறு கறை கூட அவர் மீது கிடையாது. கடந்த 20 ஆண்டுகளில் மோடியின் அரசியல் பயணத்தைக் கவனித்தால், அவருக்கு அடுத்தடுத்து சவால்கள் வந்து கொண்டிருந்ததை காணலாம். அவர் அந்த சவால்களை எதிர்கொண்ட விதத்தை நிர்வாகவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடமாக கற்பிக்க வேண்டும்.
ஒரு திறமையான தலைமை, திறன்மிக்க நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.