Tamilசெய்திகள்

பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார் – 3 நாட்கள், 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார். தென் மாநிலங்களில் 5 நாட்களில் பல்வேறு இடங்களுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

வரும் 15 முதல் 19-ந்தேதி வரை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். தமிழகத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செல்ல உள்ள இடங்களின் விவரம் வருமாறு:

* வரும் 15-ந்தேதி சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

* வரும் 16-ந்தேதி கன்னியாகுமரி பிரதமர் மோடி செல்கிறார்.

* வரும் 18-ந்தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.