Tamilசெய்திகள்

பிரதமர் மோடி நாட்டில் ஊழலை ஒழிக்க விரும்புகிறார் – கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேச்சு

புனேயில் நடந்த சுதந்திர தின விழாவில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். விழாவில் அவர் பேசியதாவது:-

கடந்த 8 ஆண்டுகளாக தற்போதைய பிரதமர் நாட்டை வழி நடத்தி வருகிறார். அவரது கீழ் செயல்படும் மந்திரி சபைக்கு 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் ஊழல் பற்றி கேள்வி பட்டீர்களா?. சில இடங்களில் (மாநிலங்களில்) மட்டும் மூத்த அதிகாரிகள் தலைவர்கள் லஞ்சம் கேட்பதாக கடிதம் எழுதினார்கள். இது நாட்டுக்கு எவ்வளவு துரதிருஷ்டமானது.

ஆனால் நீங்கள் தேசிய அளவில் மந்திரி அல்லது பிரதமர் ஊழலில் ஈடுபட்டார் என கேள்விபட்டது உண்டா?. பிரதமர் மோடி ஊழலையும், வாரிசு அரசிலையும் கடுமையாக எதிர்க்கிறார். மோடி நாட்டில் இருந்து ஊழலை ஒழிக்க விரும்புகிறார். அதற்கு பொதுமக்கள் ஆதரவு தேவை. பஞ்சாயத்து ராஜ் திட்டம் ஜனநாயகத்தை பலப்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல சுதந்திர தினத்தையொட்டி சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மோட்டார் சைக்கிள் பேரணியையும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தொடங்கி வைத்தார்.