பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள அம்ரித் பாரத் ரெயிலின் வீடியோ வெளியானது

இந்திய ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் வசத்திக்காக பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் என இருந்த நிலையில், சேரக்கூடிய இடங்களை மிகவும் விரைவாக சென்றடையும் வகையில் வந்தே பாரத் என்ற ரெயிலை அறிமுகப்படுத்தியது.

குறைந்த பெட்டிகளை கொண்ட ரெயிலாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அதிவேகமாக செல்லும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ரெயில் முழுவதும் ஏ.சி. பெட்டிகளை கொண்டது. கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் இந்திய ரெயில்வே அம்ரித் பாரத் ரெயில் என்பதை அறிமுகப்படுத்த இருக்கிறது. இன்று புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். அப்போது இரண்டு அம்ரித் பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பீகார் மாநிலத்தின் தர்பங்கா- டெல்லியின் ஆனந்த் விஹார் இடையில் ஒரு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் அயோத்தி வழியாக செல்லும். மற்றொரு ரெயில் மேற்கு வங்காளத்தின் மால்டா டவுண்- பெங்களூருவின் விஸ்வேஸ்வராய முனைமம் இடையே இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் ஏ.சி. பெட்டிகள் கிடையாது. படுக்கை வசதி கொண்ட ரெயிலாகும். தற்போது எல்.இ.டி. லைட்டுகள், செல்போன் சார்ஜ் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கொண்டதாக உள்ளது. மேலும், கட்டணமும் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 6 வந்தே பாரத் ரெயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news