பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

காணொலி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில், நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்த விரிவான விவாதம் நடைபெறும் என தெரிகிறது. சாலை போக்குவரத்து அமைச்சகம், விமான போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களால் முடிக்கப்பட்ட பணிகள் குறித்த ஆய்வும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மந்திரிகளுடனான கூட்டங்கள் பலவற்றில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவும் பங்கேற்றார்.

அதைத் தொடர்ந்து தற்போது அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மத்திய மந்திரி சபையில் மாற்றம், விரிவாக்கம் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் நடக்கும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools