பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது

பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் பல்வேறு எம்.பி.க்கள் அமைச்சரவையில் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

அரசை நடத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools