Tamilசெய்திகள்

பிரதமர் மோடி இமாசல பிரதேசத்திற்கு செல்கிறார்

இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று தலைநகர் டெல்லி சென்றார். நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது அவர் பாஜக் ஆட்சியின் 4 ஆண்டு நிறைவை முன்னிட்டு மாண்டி தொகுதிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் கூறுகையில், இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க.வின் 4 ஆண்டு கால அரசாட்சியின் நிறைவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வரும் 27-ம் தேதி மாண்டி நகருக்கு வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

அப்போது, நீர்மின் திட்டம் மற்றும் பன்னோக்கு திட்டம் உள்பட ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவித்தார்.