பிரதமர் மோடி இன்று சத்தீஸ்கர் மற்றும் உத்தர பிரதேசத்திற்கு செல்கிறார்
பிரதமர் மோடி இன்று சத்தீஸ்கர் மற்றும் உத்தர பிரதேசம் செல்கிறார். இரண்டு மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
முதலில் சத்தீஸ்கர் மாநிலம் செல்லும் அவர், ராய்ப்பூரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின் முடிவடைந்த திட்டங்களை திறந்துவைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். அங்கிருந்து கோரக்புர் செல்லும் அவர், கீதா பதிப்பகத்தின் நூற்றாண்டு விழாவின் முடிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அதனைத்தொடர்ந்து கோரக்புர் ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர் தனது சொந்த மக்களவை எம்.பி. தொகுதியான வாரணாசி செல்கிறார். இங்கு பல திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.