Tamilசெய்திகள்

பிரதமர் மோடியை ஏமாற்றமடைய செய்த சூரிய கிரகணம்

வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தோன்றி உள்ளது.

இந்த நிலையில் தன்னால் நேரடியாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை என பிரதமர் மோடி ஏமாற்றம் அடைந்துள்ளார். சூரிய கிரகணத்தை கண்ணாடி உதவியுடன் பார்க்க முயற்சித்த படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பல இந்தியர்களை போலவே, நானும் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக ஆர்வமாக இருந்தேன். துரதிருஷ்டவசமாக, மேகமூட்டம் காரணமாக என்னால் சூரியனை பார்க்க முடியவில்லை, ஆனால் கோழிக்கோடு மற்றும் பிற பகுதிகளில் நடந்த கிரகணத்தின் காட்சிகளை பார்த்தேன்.

இது தொடர்பாக நிபுணர்களுடன் பேசியதன் மூலம் இந்த வி‌ஷயத்தில் எனது அறிவு வளப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோடி கிரகணத்தை பார்க்க முயற்சிக்கும் புகைப்படத்தை வைத்து மீம்கள் உருவாக்க போகிறோம் என டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டார்.

இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, ‘மிகவும் வரவேற்கிறோம்… மகிழ்ந்திருங்கள்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *