தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக வலைதளங்களில் எப்போதும் துடிப்புடன் இருப்பவர். அவ்வப்போது தனது கருத்துக்களை பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சித்தார்த், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
விரைவில் மீண்டும் பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப், தேர்தல் சமயத்தில் என்னுடன் நேர்க்காணலுக்கு நான் உங்கள் பரிந்துரைக்கவா? நீங்கள் எப்படி பழம் உண்பீர்கள், உறக்கம், உங்களது அலுவல் மற்றும் உங்களது அழகிய குணம் பற்றி என்னிடம் நிறைய சுவாரஸ்யமான கேள்விகள் இருக்கின்றன. என்னிடம் இந்திய பாஸ்போர்ட் இருக்கிறது. தயவுகூர்ந்து குறுந்தகவல் அனுப்பவும்.
இவ்வாறு கூறியிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பாக நடிகர் அக்ஷய் குமார் பிரதமர் மோடியை நேர்க்காணல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அக்ஷய் குமார் ஓட்டு போடாதது சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவர் கனடா பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்தும் சர்ச்சை கிளம்பியது. இதனை குறிப்பிடும்படியாக சித்தார்த்தின் ட்விட் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.