X

பிரதமர் மோடியின் ஆட்சி பலவீனமாக ஆட்சியாக உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் நடைபெற்று வரும் மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

9 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.க. அரசு மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளதா? மீனவர்கள் படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்துவது இலங்கையின் வாடிக்கையாக உள்ளது. மீனவர்கள் பாதுகாப்பாக வாழ, இந்தியாவில் வலுவான ஆட்சி அமைய வேண்டும் என பேசிய மோடி என்ன செய்தார்? பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார் எனக்கூறிய பிரதமரின் வாக்குறுதி என்ன ஆனது?

ஒவ்வொரு முறையும் நான் கடிதம் எழுதிய பிறகுதான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில் தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது. இதுவரை 48 தாக்குதல் சம்பவங்கள் நடந்து, 619 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு வரும்போதெல்லாம் பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு குறித்து கோரிக்கை வைத்தேன். மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். கச்சத்தீவு இந்தியாவுக்கு தான் சொந்தம் என்பதற்கான அறிக்கையை 1973ல் கருணாநிதி வெளியிட்டார்.

கச்சத்தீவுக்காக எந்த சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவும் இல்லை. அதை தி.மு.க. ஆதரிக்கவும் இல்லை. எந்தக்காலத்திலும் கச்சத்தீவு இலங்கைக்கானது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. கச்சத்தீவுக்காக போடப்பட்டது வெறும் ஒப்பந்தம் தான். பிரதமர் மோடியின் ஆட்சி பலவீனமாக ஆட்சியாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags: tamil news