X

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராகுல் காந்தி

பிரதமர் மோடி இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடிஜி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் பிரதமருக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.