நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பிரதமராக மோடி 3-வது முறையாக நாளை பதவியேற்கிறார்.
பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு, உலக பணக்காரரான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் உங்களது வெற்றிக்கு வாழ்த்துகள் நரேந்திர மோடி. இந்தியாவில் எனது நிறுவனங்கள் உற்சாகமாக பணிகளைச் செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றன என்று கூறியுள்ளார்.