அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்த இப்படத்திற்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்தார். நாகூரன் படத்தொகுப்பை மேற்கொண்டார். வரலாற்று பாணியில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 9-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.