பிப்ரவரி 22 ஆம் தேதி ‘எல்.கே.ஜி’ ரிலீஸ்!
ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எல்.கே.ஜி’. இயக்குனர் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். பிரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ளார். நடப்பு அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.
இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் படத்தின் மீதும் அதிக எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டது. இந்நிலையில், இப்படத்தை பிப்ரவரி 22ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இதை நடிகர் ஆர்ஜே பாலாஜி, ‘அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, தேர்தல் தேதி அறிவிப்பு என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.