பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரராக இங்கிலாந்தின் ஹாரி புரூக் தேர்வு

இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி புரூக் பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக0 தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டி ஆகியோரின் கடுமையான போட்டியை முறியடித்து, வளர்ந்து வரும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஹாரி புரூக் விருதுக்கான வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் டெஸ்டில் அறிமுகமான போதிலும், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ஏற்கனவே இங்கிலாந்தின் புதிய ஆபத்தான மனிதராக உருவெடுத்து வருகிறார், மேலும் டிசம்பரில் ஐசிசி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற பிறகு, அவரது வேகம் இன்னும் அதிகரித்துள்ளது.

பிப்ரவரியில் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக வெலிங்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 24 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உள்பட ஒரு இன்னிங்ஸில் 186 ரன்களை விளாசியிருந்தார். மொத்தம் நடந்த இரண்டு டெஸ்டில் அவர் 329 ரன்கள் எடுத்தார். இதேபோல், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் 2வதுமுறையாக சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools