பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருது – ரவீந்திர ஜடேஜா பெயர் பரிந்துரை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக், காயம் காரணமாக ஓய்வில் இருந்து பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் குடாகேஷ் மோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூவரில் அதிக வாக்குகள் பெறுபவருக்கு ஐசிசி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்படும். அதே போல் ஐசிசி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா), நாட் ஸ்கிவர்-பிரண்ட் (இங்கிலாந்து), ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools