சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு இந்திய முப்படைகளின் தலைமைப் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது குன்னூர் பஸ் நிலையததில் இருந்து 5. கி.மீ. தொலைவில் உள்ள காட்டேரி பூங்கா, நஞ்சப்பசத்திரம் மலைப்பகுதி பள்ளத்தாக்கில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது.
இதில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர். குரூப் கமாண்டர் ஒருவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
13 பேரின் உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இன்று மாலை பிபின் ராவத் உடல் டெல்லி கன்டோண்மென்ட்-க்கு எடுத்துக் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக நீலகிரியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.