பின்வாங்கிய சூர்யா! – சூரரைப் போற்று ரிலீஸ் தேதியில் மாற்றம்
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதே தேதியில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாவதால், தியேட்டர் பங்கீட்டில் சிக்கல் ஏற்படும் என்பதற்காக சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை மே 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் தனுஷின் ஜகமே தந்திரம், விஷாலின் சக்ரா, ஜெயம் ரவியின் பூமி ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.