’பிதாமகன்’ தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்

விஜயகாந்த் நடித்த ‘கஜேந்திரா’, விக்ரம், சூர்யா நடித்த ‘பிதாமகன்’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ உள்பட ஒரு சில படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றி உள்ளார்.

சமீபத்டிஹ்ல் வி.ஏ.துரை வறுமையின் காரணமாக தவித்து வருவதாகவும், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருப்பதாகவும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர்கள் பலரும் அவருக்கு உதவி செய்தார்கள்.

இந்த நிலையில், தயாரிப்பாளர் வி.ஏ.துரை நேற்று இரவு சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema