‘பிச்சைக்காரன் 3’ விரைவில் உருவாக உள்ளது – விஜய் ஆண்டனி அறிவிப்பு
விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இதில் விஜய் ஆண்டனி நடித்ததோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும், ‘பிச்சைக்காரன் -2’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிச்சைக்காரன் 3-ஆம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, ‘பிச்சைக்காரன் 3’ திரைப்படம் விரைவில் உருவாகவுள்ளதாகவும் இந்த பாகத்தின் திரைக்கதை முற்றிலும் வித்தியாசமான கதையம்சத்தில் இருக்கும் என்றும் விஜய் ஆண்டனி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.