லோதா கமிட்டி தலைமையிலான குழு பிசிசிஐ-யில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் பெரும்பாலானவற்றை உச்சநீதிமன்றம் அமல்படுத்தியது.
அதில் ஒன்று மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது பி்சிசிஐ-யில் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தால் மூன்று ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் பதவி வகிக்க முடியும். அதன்படி பார்த்தால் பிசிசிஐ பொருளாளராக இருக்கும் ஜெய் ஷாவின் ஆறு ஆண்டுகள் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் முடிவடைந்தது. கங்குலியின் பதவிக்காலம் ஜூலை 27-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இருவரும் இனிமேல் மூன்று ஆண்டு கழித்துதான் பதவி வகிக்க முடியும். அதனால் கட்டாயம் இடைவெளி விட வேண்டும் (cooling-off period) என்ற விதியை மாற்றும்படி ஏப்ரல் 21-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்தே தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மீது விசாரணைக்கு வந்தது. மனுவை இன்று இந்த அமர்வு விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மனுரை விசாரிக்க சம்மதம் தெரிவித்து தலைமை நீதிபதி இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.
இருவரும் பிசிசிஐ-யில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவி ஏற்றனர். 2025 வரை பதவிக்காலத்தை நீட்டிக்க மனு செய்துள்ளனர்.