Tamilசினிமா

‘பிசாசு 2’ படப்பிடிப்பு முடிவடைந்தது

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் சந்தோஷ் பிரதாப், பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், ‘பிசாசு 2’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திண்டுக்கல்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘பிசாசு 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் பின்னணி பணிகளை முடித்து இந்தாண்டு இறுதியில் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.